குஜராத் சட்டசபை தேர்தல்: தேர்தல் கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடிதம்


குஜராத் சட்டசபை தேர்தல்: தேர்தல் கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடிதம்
x

கோப்புப்படம்

குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

குஜராத் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில், அங்கு உள்ள 1000-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார், அதன்படி, அந்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் அனைவரும் தேர்தலில் பங்களிப்பு செய்வதை கண்காணிக்க வேண்டும்,

யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்பது பற்றி அவர்கள் தங்கள் இணையதளத்தில் அல்லது அலுவலக விளம்பர பலகையில் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளது. இது கட்டாய ஓட்டுக்கான கட்டாய நடவடிக்கை என வர்ணித்துள்ள அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு, இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், குஜராத் தொழில் நிறுவனங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Next Story