பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை !


பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை !
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 May 2022 6:08 AM IST (Updated: 23 May 2022 6:22 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் மான்காபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவ் நகர் பகுதியில் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வரும்போது, குறிப்பிட்ட காரணத்திற்காக பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், விரக்தியடைந்த மாணவி, வீட்டின் கூரையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது அக்கா இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தங்கை, தானும் தற்கொலை செய்யும் நோக்கில், வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அவரது நிலை மோசமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்த மாணவி எழுதிய கடிதத்தை மீட்ட போலீசார், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story