"உலகளாவிய வாழ்க்கை முறை இயக்கம்" – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்


உலகளாவிய வாழ்க்கை முறை இயக்கம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x

சுற்றுச்சூழலுக்கான உலகளாவிய வாழ்க்கை முறை இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

'உலகளாவிய லைஃப் இயக்கம்" – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி,

உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்,'சுற்றுச்சூழலுக்கான உலகளாவிய வாழ்க்கை முறை இயக்கம்' என்ற உலகளாவிய முயற்சியைத் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக,பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள்,சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் நோக்கில் கல்வியாளர்கள்,பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அழைக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கம் தொடங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story