பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் தங்கம் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமான நிலையத்தில் கடத்திய ரூ.34 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ேதவனஹள்ளி:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் துபாயில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் துபாயில் இருந்து வந்திறங்கிய விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவரின் உடைமையில் துணிகளுக்கு இடையே பேஸ்ட் வடிவில் 684 கிராம் தங்கம் இருந்தது தெரிந்தது. அவர் துபாயில் இருந்து பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் இதேபோல் பலமுறை வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.34 லட்சம் மதிப்பிலான 684 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story