நாளை முதல் 10-ந்தேதி வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி


நாளை முதல் 10-ந்தேதி வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி
x

கோப்புப்படம்

நாளை முதல் 10-ந்தேதி வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் நோக்கில், பணத்துக்கு பதிலாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பத்திரங்களை வெளியிடும் அங்கீகாரம் பெற்ற ஒரே வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 21 முறை தேர்தல் பத்திர விற்பனை நடைபெற்று இருக்கிறது. கடைசியாக கடந்த ஜூலை 1 முதல் 10-ந்தேதி வரை பத்திரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.

இந்த வரிசையில் 22-வது தேர்தல் பத்திர விற்பனை அக்டோபர் 1 (நாளை) முதல் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகள் மூலம் இந்த பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.

இதற்கான ஒப்புதலை மத்திய அரசு நேற்று அளித்து உள்ளது. குஜராத், இமாசல பிரதேச மாநில சட்டசபைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story