அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டிடப்பணிகளை சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆய்வு


அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டிடப்பணிகளை சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் ரூ.638 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி, ஆஸ்பத்திரி கட்டிடப்பணிகளை சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சிக்கமகளூரு:-

ரூ.638 கோடியில் கட்டிடம்

சிக்கமகளூரு (மாவட்டம்) டவுனில் கதிரிமிதிரி பகுதியில் புதியதாக ரூ.638 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதேபோல அரசு அதி நவீன ஆஸ்பத்திரியும் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடப்பணிகளை சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளை அழைத்த அவர் பணிகளை துரிதமாக முடிக்கும்படியும். தரமானதாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சிக்கமகளூரு தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவு இந்த மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரி கட்டுவதற்காக ரூ.638 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதி நவீன வசதி

இந்த மருத்துவ கல்லூரியில் படிப்பதற்காக சேர்ந்த மாணவர்களுக்கு தற்போது வேறு இடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற மே மாதங்களில் முதற்கட்ட பணிகள் முடிந்துவிடும். அதன் பின்னர் அந்த மாணவர்களுக்கு புதிய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்படும்.

முழு பணிகளும் முடிந்து மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகள் செயல்பட தொடங்கிவிட்டால், சிக்கமகளூரு தொகுதி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சிகிச்சைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அனைத்து நோய்களுக்கும் அதி நவீன சிகிச்சைகள் இ்ங்கு வழங்கப்படும். இது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். விரைவில் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.

எனவே துரிதமாக பணிகளை முடிக்கும்படி அதிகாரிகளுக்கும், என்ஜினீயர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் கட்டிடம் தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளேன். எனவே ஆஸ்பத்திரி கட்டுமானப்பணிகள் முடிந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story