சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டமா? - மத்திய அரசு விளக்கம்


சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டமா? - மத்திய அரசு விளக்கம்
x

கோப்புப்படம்

சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

வடஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மூண்டுள்ள சண்டையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சூடானில் நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமை பதற்றமாக உள்ளது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். பிற நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். சூடான் நிலவரம் குறித்து நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளரை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசுவார் என்று அவர் கூறினார்.

சூடானில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்களா? என்று கேட்டதற்கு, ''சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அது கள நிலவரத்தை பொறுத்தது'' என்று அவர் கூறினார்.


Next Story