குஜராத் சட்டசபை தேர்தல்; 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி


குஜராத் சட்டசபை தேர்தல்; 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி
x

குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி 12 பேர் கொண்ட மற்றொரு வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது.



ஆமதாபாத்,



குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதிக்குள் சட்டசபையின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் இந்த முறை பா.ஜ.க. மற்றும் காங்கிரசுடன், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.

குஜராத்தில் 24 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இவற்றில், 12 ஆண்டுகள் 227 நாட்கள் வரை பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து உள்ளார்.

அவருக்கு முன் கேசுபாய் பட்டேல் 216 நாட்கள் வரை குஜராத்தில் முதல்-மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார். மோடியை தொடர்ந்து, ஆனந்திபென் பட்டேல், விஜய் ரூபானி மற்றும் தற்போது பதவியில் உள்ள பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் முதல்-மந்திரிகளாக இருந்துள்ளனர்.

இந்த தேர்தலை தீவிர பிரசாரத்தில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார். ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன், தொடர்ந்து குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.

குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி 12 பேர் கொண்ட மற்றொரு வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது.

இதன்படி, பூஜ் தொகுதியில் ராஜேஷ் பண்டோரியாவும், இடார் தொகுதியில் ஜெயந்திபாய் பர்னாமியும், நிகோல் தொகுதியில் அசோக் கஜேராவும் போட்டியிடுகின்றனர். சபர்மதியில் இருந்து போட்டியிட ஜஸ்வந்த் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சஞ்சய் பதாஸ்னா தங்கராவில் இருந்தும், வால்ஜிபாய் மக்வானா, ரவ்ஜிபாய் சோமாபாய் வகேலா மற்றும் உதய்சின் சவுகான் ஆகியோர் முறையே கொடினா, மகுதா மற்றும் பலசினோர் தொகுதிகளில் இருந்தும் போட்டியிடுகின்றனர். பனாபாய் தமோர் மோர்வா ஹடாப் தொகுதியிலும், அனில் கராசியா ஜலோடில் தொகுதியிலும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

தெதியாபாத தொகுதியில் சாய்தர் வாசவாவும், வியாரா தொகுதியில் பிபின் சவுத்ரியும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இது அக்கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியல் ஆகும். குஜராத் தேர்தலுக்கு இதுவரை 53 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது.


Next Story