சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு- மும்பையில் பரபரப்பு


சல்மான்கான் வீட்டின் அருகே  துப்பாக்கிச்சூடு- மும்பையில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2024 3:33 AM GMT (Updated: 14 April 2024 4:51 AM GMT)

நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கான் வீடு மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Next Story