இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: எச்சரிக்கை விடுத்த மத்திய மந்திரி


இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: எச்சரிக்கை விடுத்த மத்திய மந்திரி
x

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் இறுதி ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. சமீப காலமாகத்தான், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா ஜே.என்.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் 2 பேருக்கும், கோவாவில் 19 பேருக்கும். மராட்டியத்தில் மற்றும் கேரளா மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா ஜே.என்.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி மாண்டவியா தெரிவித்தார்.

கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Next Story