சுட்டெரிக்கும் வெயில்: ஒடிசாவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை


சுட்டெரிக்கும் வெயில்: ஒடிசாவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை
x
தினத்தந்தி 17 April 2024 4:27 PM GMT (Updated: 17 April 2024 4:31 PM GMT)

ஒடிசாவில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெப்ப அலை வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒடிசாவில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் எனவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கு மேல் உயரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"வெயில் தொடர்பான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை மூடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story