மேகாலாவில் வெளுத்து வாங்கும் கனமழை; ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்
கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மரப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
ஷில்லாங்,
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அங்குள்ள புகி ஆற்றின் மேல் கட்டப்பட்ட மரப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அங்குள்ள ஜிஜிகா மற்றும் மெகுவா ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த மரப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மரப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த சமயத்தில் பாலம் பயன்பாட்டில் இல்லாததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story