இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - வெப்பநிலை மைனஸ் 8.3 டிகிரியாக பதிவு


இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - வெப்பநிலை மைனஸ் 8.3 டிகிரியாக பதிவு
x

பாதுகாப்பு கருதி 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 476 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சிம்லா,

இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், தாவரங்கள் உள்பட அனைத்தும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது.

கிலாங் பகுதியில் மைனஸ் 8.3 டிகிரி வெப்பநிலை பதிவானதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. பனிப்பொழிவால் சாலைகள் தெரியாத அளவுக்கு முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 476 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.Next Story