ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய ராணுவம்


ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய ராணுவம்
x

Image Courtesy : ANI

இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பெண்ணை குப்வாராவில் உள்ள தலைமை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள குப்வாரா மாவட்டத்தில், கடும் பனிப்பொழிவிற்கு இடையே கர்ப்பிணி பெண் ஒருவரை இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

குப்வாராவில் உள்ள தாங்தர் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அந்த பெண்ணுக்கு மேல் சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாததால், அவரை குப்வாராவில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பனிப்பொழிவு காரணமாக வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இந்த ராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய ராணுவத்தின் சார்பில் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, அந்த கர்ப்பிணி பெண்ணை குப்வாரா மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அந்த பெண்ணுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்களில் இதே போல் கடும் பனிப்பொழிவிற்கு நடுவே கர்ப்பிணி பெண்களை இந்திய ராணுவம் வீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story