வழக்கை ரத்து செய்ய கோரி டி.கே.சிவக்குமார் மனு சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு


வழக்கை ரத்து செய்ய கோரி டி.கே.சிவக்குமார் மனு சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு
x

டி.கே.சிவக்குமார் தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்பக்கூறி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான கர்நாடகம் மற்றும் டெல்லியில் உள்ள வீடு, அலுவலகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதன்தொடர்ச்சியாக டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி டி.கே.சிவக்குமார் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


அந்த வழக்கு நேற்று நீதிபதி சித்தப்பா சுனில் தத்யாதவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.கே.சிவக்குமார் தரப்பு வக்கீல், மனுதாரர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்த போது முறையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவில்லை. மேலும் குடும்ப உறுப்பினர்கள் பற்றி சரியான தகவல் இல்லை. குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களும் டி.கே.சிவக்குமாரின் பெயரிலேயே காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.


Next Story