அக்னிபத் போராட்டம்: ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - ரெயில்வே மந்திரி வேண்டுகோள்


அக்னிபத் போராட்டம்: ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - ரெயில்வே மந்திரி வேண்டுகோள்
x

அக்னிபத் போராட்டகாரர்கள் ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்று ரெயில்வே மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா, தெலுங்கான உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. ரெயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்னிபத் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், ரெயில்வேயின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ரெயில்வே என்பது நாட்டின் சொத்து, அவற்றை நாம் தான் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story