லண்டன் கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை - ராகுல்காந்தி


லண்டன் கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை - ராகுல்காந்தி
x

லண்டனில் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.

டெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் - ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் கருத்தரங்கில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் 3-வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அவை நடவடிக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு மசோதா, விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற அமளி, லண்டன் பயணத்தின் போதிய பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, லண்டன் கருத்தரங்கில் நான் இந்தியாவுக்கு எதிராக எதையும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க என்னை அனுமதித்தால் நான் விளக்கம் அளிப்பேன்.

நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால் நான் என்ன நினைக்கிறேனோ அதை பேசுவேன்' என்றார்.


Next Story