'அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்' - முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்


அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன் - முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
x

நாம் அனைவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று அருள் பெற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 'அயோத்தி ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்' என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"அயோத்தி ராமர் கோவில் இந்த காலகட்டத்தில் கட்டப்படுவது நமது அதிர்ஷ்டம். எனவே அங்கு நாம் அனைவரும் சென்று அருள் பெற வேண்டும். யார் சென்றாலும், செல்லவிட்டாலும் நான் கண்டிப்பாக அயோத்திக்கு செல்வேன். எந்த கட்சி போனாலும், போகாவிட்டாலும் அது குறித்து கவலையில்லை. நான் நிச்சயம் அங்கு செல்வேன். நான் ராமர் கோவிலுக்கு செல்வதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்."

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.


Next Story