கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன் - மத்திய மந்திரி சுரேஷ் கோபி


கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன் - மத்திய மந்திரி சுரேஷ் கோபி
x

கோப்புப்படம் 

கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம் என்று மத்திய மந்திரி சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள மக்கள் வழங்கிய ஆசீர்வாதத்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன்.

என் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன்.

பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும். சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள். கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story