நாடாளுமன்றத்தில் 'மைக்' அணைக்கப்படுகிறதா? - ராகுல்காந்திக்கு துணை ஜனாதிபதி கண்டனம்


நாடாளுமன்றத்தில் மைக் அணைக்கப்படுகிறதா? - ராகுல்காந்திக்கு துணை ஜனாதிபதி கண்டனம்
x

நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுவதாக தெரிவித்த ராகுல்காந்திக்கு துணை ஜனாதிபதி கண்டனம் தெரிவித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ''நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது 'மைக்' அணைக்கப்படுகிறது'' என்று குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில், பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கரன்சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் அதற்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:-

இந்தியாவின் வரலாற்று சாதனைகளை உலகமே பாராட்டுகிறது. ஆனால், நம்மிடையே உள்ள எம்.பி.க்கள் சிலர், சிந்தனையின்றி, நியாயமின்றி நமது நாடாளுமன்றத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

அவர்கள் வெளிநாட்டில் அப்படி பேசுவதை நியாயப்படுத்த முடியாது. அப்படி பேச என்ன தைரியம்? நான் மவுனமாக இருந்தால், அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றவில்லை என்று அர்த்தம் என்று அவர் பேசினார்.


Next Story