கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால்... டெல்லி மந்திரி பதில்


கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால்... டெல்லி மந்திரி பதில்
x

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சம்மன் என்ற செய்தி வெளியானதும், மத்திய அரசை ஆம் ஆத்மி தலைவர்கள் குறை கூறி வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணையில் நவம்பர் 2-ந்தேதி நேரில் ஆஜராகும்படி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால், கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சமடைந்து உள்ளது.

கெஜ்ரிவாலுக்கு சம்மன் என்ற செய்தி வெளியானதும், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை ஆம் ஆத்மி தலைவர்கள் குறை கூறி வருகின்றனர்.

இதுபற்றி டெல்லி நிர்வாக துறை மந்திரி சவுரப் பரத்வாஜ் கூறும்போது, ஆம் ஆத்மியை அழிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதியிது என கூறியுள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்டாலும், டெல்லி மக்களுக்காக அரசு தொடர்ந்து பணியாற்றும் என கூறியுள்ளார்.

சிறைக்கு அனுப்பப்பட்டால் அரசு எப்படி இயங்கும்? கட்சி எப்படி செயல்பட முடியும்? என பா.ஜ.க. நினைக்கிறது. எல்லோரும் சிறைக்கு அனுப்பப்பட்டாலும், சிறையில் இருந்து அரசும், கட்சியும் இயங்கும் என பா.ஜ.க.வுக்கு கூறி கொள்ள விரும்புகிறேன்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்வரை தொடர்ந்து கட்சியானது போராடும். தெருக்களில் இருந்தும் பின்னர் சிறையில் இருந்தும் நான் போராடுவேன் என அவர் கூறியுள்ளார்.


Next Story