"எதிர்கட்சிகள் ஒன்றுபட்டால் பா.ஜ.க. வெற்றி பெறுவது கடினம்" - ராகுல் காந்தி


எதிர்கட்சிகள் ஒன்றுபட்டால் பா.ஜ.க. வெற்றி பெறுவது கடினம் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 31 Dec 2022 10:49 AM GMT (Updated: 31 Dec 2022 10:53 AM GMT)

பா.ஜ.க.வின் எதிர்வினைகளால் காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், சாதாரணமாக தொடங்கிய தனது இந்திய ஒற்றுமை யாத்திரையில், ஒவ்வொரு நாளும் மக்களின் குரல்களையும், உணர்வுகளையும் உணர்ந்ததாக தெரிவித்தார்.

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தங்களை எந்த அளவிற்கு எதிர்த்தாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு பயனுள்ளதாகவே இருக்கும் என்று அவர் கூறினார். பா.ஜ.க.வின் எதிர்வினைகளால் காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை பா.ஜ.க.விடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும், இதனால் அக்கட்சியே தனக்கு ஆசான் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே போல் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் பா.ஜ.க. வெற்றி பெறுவது கடினம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story