கேரளாவில் திடீரென 10 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய மணல்..!
கேரளாவில் தொடர் கனமழை காரணமாக கிழவிப்பாறை பகுதியில் மண் உள்வாங்கியுள்ளது.
கோழிக்கோடு,
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சின்னக்கானர் அருகே உள்ள கிழவிப்பாறை என்ற இடத்தில் கனமழையால், நிலத்தில் ஏற்பட்ட விரிசலின் காரணமாக 10 அடி ஆழத்திற்கு மண் உள்வாங்கி உள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் சசி என்பவரின் வீட்டின் பின்புறம் வாசல்படி உட்பட 10 அடி ஆழத்திற்கு மண் உள்வாங்கியுள்ளதால், வீடு எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. மேலும் இதேபோல அப்பகுதியில் 500 மீட்டர் வரை மண் உள்வாங்கியுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story