மூடிகெரே தாலுகாவில் வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.6½ லட்சம் நகை, பணம் திருட்டு


மூடிகெரே தாலுகாவில்  வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.6½ லட்சம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

மூடிகெரே தாலுகாவில் வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.6½ லட்சம் மூடிகெரே தாலுகாவில் வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.6½ லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

சிக்கமகளூரு-

மூடிகெரே தாலுகாவில் வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.6½ லட்சம் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காபி தோட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கனசூர் கிராமத்ைத சேர்ந்தவர் வேதாவதி. இவருக்கு சொந்தமான காபி தோட்டம் அப்பகுதியில் உள்ளது. வேதாவதி காைல காபி தோட்டத்திற்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை வேதாவதி வீட்டை பூட்டிவிட்டு காபி தோட்டத்திற்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் வேதாவதி வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கினர்.

பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிசென்றனர். இந்தநிலையில் காபி தோட்டத்திற்கு சென்ற வேதாவதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதனை பார்த்து வேதாவதி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறைக்குள் சென்று அவர் பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 120 கிராம் தங்க நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்்தை காணவில்லை. இதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.6½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கோனிபீடு போலீசாருக்கு வேதாவதி தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து கோனிபீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். வீட்டின் மேற்கூரையை மர்மநபா்கள் பிரித்து ரூ.6½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story