மராட்டிய மாநிலம் தானேவில் 5 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு


மராட்டிய மாநிலம் தானேவில் 5 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு
x

ஒரு பெண் உள்பட 5 பேருக்கு ஜே.என்.1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானேவில் கடந்த நவம்பர் 30-ந்தேதியில் இருந்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் இதுவரை 5 பேருக்கு ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தானேவில் தற்போது 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே சமயம் ஒரு பெண் உள்பட 5 பேருக்கு ஜே.என்.1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story