உத்தரபிரதேசத்தில் அரசு அதிகாரியை மிரட்டியதாக பா.ஜ.க. எம்.பி. மீது புகார்


உத்தரபிரதேசத்தில் அரசு அதிகாரியை மிரட்டியதாக பா.ஜ.க. எம்.பி. மீது புகார்
x

உத்தரபிரதேசத்தில் அரசு அதிகாரியை மிரட்டியதாக பா.ஜ.க. எம்.பி. மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாரபங்கி,

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் குமார் குப்தா என்பவர் மாநில நீர்ப்பாசனத் துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர், பாரபங்கி தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. உபேந்திர ராவத் தன்னை செல்போனில் மிரட்டியதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர் போலீசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதோடு இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்பானத்துறையின் தலைமை என்ஜினீயருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதே சமயம் பா.ஜ.க. எம்.பி. எதற்காக தன்னை மிரட்டினார் என்பதை அவர் தனது புகாரில் தெரிவிக்கவில்லை.

இந்த குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க. எம்.பி. உபேந்திர ராவத்திடம் கேட்டபோது, திரிவேதிகஞ்ச் கிராமத்தில் பாலம் கட்டுவது தொடர்பாக உதவி என்ஜினீயரிடம் பேசியதாகவும், இது தொடர்பாக அவருக்கு பல கடிதங்கள் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார். அரசு அதிகாரியை பா.ஜ.க. எம்.பி. மிரட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story