சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் நெசவுத்தொழிலை கவுரவித்த 'கூகுள்'


சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் நெசவுத்தொழிலை கவுரவித்த கூகுள்
x

சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் நெசவுத்தொழிலை ‘கூகுள்’ கவுரவித்தது.

புதுடெல்லி,

உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான 'கூகுள்' உலகின் மிக முக்கிய தினங்களை கொண்டாடும் வகையிலும், அதை உலகெங்கும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும் சிறப்பு 'டூடுல்' (கவன ஈர்ப்பு சித்திரம்) வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நெசவுத்தொழிலை கவுரவிக்கும் விதமாக சிறப்பு 'டூடுலை' கூகுள் நேற்று வெளியிட்டது.

டெல்லியை சேர்ந்த பெண் ஓவியரான நர்மதா குமார் என்பவர் இதனை உருவாக்கி உள்ளார். இதில் பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சீபுரம் பட்டு இடம் பெற்றுள்ளது. இதுதவிர குஜராத்தின் குட்ச் எம்ப்ராய்டரி, ஒடிசாவின் இகாட், காஷ்மீரின் பாஸ்மினா பட்டு, கேரளாவின் காசவு பட்டு உள்பட பல இந்திய நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பட்டுச்சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.


Next Story