உயிர்களை காக்கும் உன்னத பணியில் உலக நாடுகளின் பங்குதாரராக இந்தியா... பிரதமர் மோடி பேச்சு


உயிர்களை காக்கும் உன்னத பணியில் உலக நாடுகளின் பங்குதாரராக இந்தியா... பிரதமர் மோடி பேச்சு
x

உயிர்களை காக்கும் உன்னத பணியில் உலக நாடுகளின் பங்குதாரராக இந்தியா உள்ளது என ஒரே பூமி, ஒரே சுகாதாரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த ஒரே பூமி, ஒரே சுகாதாரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, சுகாதார நலன் என வரும்போது, இந்தியாவுக்கு வலிமை வாய்ந்த பல விசயங்கள் உள்ளன.

நம்மிடம் திறமை உள்ளது. தொழில் நுட்பம் உள்ளது. சாதனை பதிவுகளை நாம் வைத்திருக்கிறோம். பாரம்பரியமும் நம்மிடம் உள்ளது. தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் வழியே உயிர்களை காக்கும் உன்னத பணியில் பல நாடுகளுக்கு பங்குதாரராக இருப்பதில் இந்தியா பெருமைப்படுகிறது என பேசியுள்ளார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட, உலகளாவிய பெருந்தொற்றுகள் இல்லாதபோதும், சுகாதாரத்திற்கான இந்தியாவின் பார்வை எப்போதும் பிரபஞ்ச அளவில் இருந்தது. இன்று நாம் ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என பேசும்போது, அதே நினைவு, செயலாக்கம் பெற்று உள்ளது.

வியாதிகள் குறைந்ததும், இந்தியாவின் சுகாதாரம் பற்றிய பார்வை நின்று போய்விடவில்லை. நம்முடைய இலக்கு உடல்நலமுடன் இருத்தல் மற்றும் ஒவ்வொருவரும் நலமுடன் இருப்பது ஆகும். நம்முடைய இலக்கானது உடல்சார்ந்த, மனம் மற்றும் சமூக நலன் சார்ந்தது என்று அவர் பேசியுள்ளார்.

திறமை என வரும்போது, இந்திய மருத்துவர்களின் தாக்கங்களை இந்த உலகம் பார்த்துள்ளது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நமது மருத்துவர்கள், அவர்களது திறமை மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றிற்காக பரவலாக மதிக்கப்பட்டு உள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.


Next Story