2022-ம் ஆண்டு கார் விற்பனையில் சர்வதேச அளவில் இந்தியா 3-வது இடம் - ஜப்பானை பின்னுக்கு தள்ளியது


2022-ம் ஆண்டு கார் விற்பனையில் சர்வதேச அளவில் இந்தியா 3-வது இடம் - ஜப்பானை பின்னுக்கு தள்ளியது
x

2022 ஆண்டில் ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கார்கள் விற்பனையில் சீனா முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 2021-ம் ஆண்டு நிலவரத்தின்படி, சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அமெரிக்கா 1.5 கார்களை விற்பனை செய்து 2-வது இடத்திலும், 44 லட்சம் கார்களை விற்பனை செய்து ஜப்பான் 3-வது இடத்திலும் இருந்தது.

இந்நிலையில் ஜப்பானில் கடந்த 2022-ம் ஆண்டு கார் விற்பனை 42 லட்சமாக குறைந்தது. அதே சமயம் இந்தியாவில் 42.5 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதன் மூலம் 2022 ஆண்டில், ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பெட்ரோல், டீசல் கார்களே அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளதாகவும், மின்சார கார்களின் விற்பனை ஒப்பிட்டளவில் மிகவும் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story