'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் 6-ம் தேதி நடைபெறும்: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்


இந்தியா கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் 6-ம் தேதி நடைபெறும்: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
x
தினத்தந்தி 3 Dec 2023 5:56 AM GMT (Updated: 3 Dec 2023 6:38 AM GMT)

ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் அடுத்த ஆலோசனைக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அடுத்த ஆலோசனை கூட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த அழைப்பினை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6-ந்தேதி டெல்லி செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story