கொரோனா காலத்தில் இந்தியா இலவசங்களை வழங்கவில்லை, ரேஷன் பொருட்களை வழங்கி உதவியது: யோகி ஆதித்யநாத்


கொரோனா காலத்தில் இந்தியா இலவசங்களை வழங்கவில்லை, ரேஷன் பொருட்களை வழங்கி உதவியது: யோகி ஆதித்யநாத்
x

கொரோனா காலத்தில் இந்தியா இலவசங்களை வழங்கவில்லை என்றும், இலவச ரேஷன் பொருட்களை வழங்கி உதவியதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் கண்காட்சியைத் தொடக்கிவைத்த பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் , "கொரோனா வைரஸ் தொற்று காலத்தின் போது இலவசங்களை வழங்காமல் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் மூலம் உதவியது இந்தியா மட்டுமே" என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இலவசம் வழங்காத ஒரே நாடு இந்தியா மட்டுமே, ஆனால் தேவை ஏற்பட்டபோது, ​​80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது. மேலும், 200 கோடிக்கும் அதிகமான இலவச தடுப்பூசி டோஸ்களும் கிடைக்கப்பெற்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அசையாமல் இருந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே, ஆனால் முழு பொறுமையுடனும் வலிமையுடனும் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இதற்கான பெருமை அனைத்தும் பிரதமர் மோடியையே சேரும். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நாடு உருவெடுத்துள்ளது பெருமைக்குரியது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் திறன் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது" என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.


Next Story