புதிதாக 3,038 பேருக்கு கொரோனா: தொற்று பாதிப்பு சற்றே சரிவு


புதிதாக 3,038 பேருக்கு கொரோனா: தொற்று பாதிப்பு சற்றே சரிவு
x

கோப்புப்படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,038 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நம் நாட்டில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கையில் அதிரடி சரிவு காணப்பட்டது. 24 மணி நேரத்தில் 3,038 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு பதிவானது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 740 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தொற்றால் இதுவரையில் மொத்தம் 4 கோடியே 47 லட்சத்து 29 ஆயிரத்து 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கேரளா, மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், அரியானா, இமாசலபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் தொற்று பாதிப்பு 3 இலக்கங்களில் பதிவாகி உள்ளது.

நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 2,069 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 77 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பினால் நேற்று முன்தினம் 11 பேர் பலியான நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை சற்றே குறைந்து 9 ஆக பதிவானது. டெல்லியிலும், பஞ்சாபிலும் தலா 2 பேரும், காஷ்மீர், மராட்டியம், உத்தரகாண்ட் ஆகியவற்றில் தலா ஒருவரும் மரணம் அடைந்த வேளையில் கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 2-ஐ கணக்கில் காட்டினர்.

இதனால் தொற்றுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 960 கூடியது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 179 ஆக இருந்தது.


Related Tags :
Next Story