தொடர்ந்து 3-வது நாளாக 6 ஆயிரத்துக்குள் அடங்கியது கொரோனா


தொடர்ந்து 3-வது நாளாக 6 ஆயிரத்துக்குள் அடங்கியது கொரோனா
x

கோப்புப்படம்

இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிகை 6 ஆயிரத்துக்குள் பதிவானது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினமும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தினமும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலை சற்று மாறி இருக்கிறது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்குள் அடங்கியது. நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 880 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது 5 ஆயிரத்து 676 ஆக குறைந்தது.

இதுவரை தொற்றால் 4 கோடியே 47 லட்சத்து 68 ஆயிரத்து 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக நேற்று கேரளாவில் 2 ஆயிரத்து 273 பேருக்கு தொற்று ஏற்பட்டது,

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 796 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

நேற்று ஒரு நாளில் தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 761 பேர் மீண்டனர். இதுவரையில் மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 79 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

தொற்றால் நேற்று முன்தினம் 14 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 21 ஆக பதிவானது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தானில் தலா 3 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், குஜராத், அரியானா, மராட்டியம், தமிழ்நாட்டில் தலா ஒருவரும் பலியாகினர். கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் 6-ஐ கணக்கில் சேர்த்தனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரமாக உயர்ந்தது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 1,894 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் 37 ஆயிரத்து 93 பேர் தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்தனர்.


Related Tags :
Next Story