மணிப்பூர் முதல்-மந்திரி வீட்டை தாக்க முயற்சி: போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார்


மணிப்பூர் முதல்-மந்திரி வீட்டை தாக்க முயற்சி: போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
x

கலவரம் நீடித்து வரும் நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி வீட்டை தாக்க முயற்சி போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்

இம்பால்,

மணிப்பூரில் மாதக்கணக்கில் நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்-மந்திரி பைரேன் சிங்குக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்த நிலையில் இம்பாலில் உள்ள அவரது பூர்வீக வீட்டை நோக்கி ஏராளமான போராட்டக்காரர்கள் நேற்று இரவு திரண்டு வந்தனர். வீட்டை தாக்கும் ேநாக்கில் வந்த அவர்களை, சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் மூலம் முதல்-மந்திரியின் பூர்வீக வீட்டை தாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இம்பாலில் உள்ள அரசு வீட்டில் பைரேன் சிங் தங்கியிருப்பதால், அவரது பூர்வீக வீட்டில் தற்போது யாரும் வசிக்கவில்லை. எனினும் மாநிலத்தில் கலவரம் நீடிப்பதால் அந்த வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story