இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அரசு வலியுறுத்தல்


இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அரசு வலியுறுத்தல்
x

இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு இன்று கேட்டு கொண்டுள்ளது.



புதுடெல்லி,



பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருக்கிறது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் தீவு நாடான இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று பேசும்போது, இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் அல்லது இலங்கை செல்ல நினைக்கும் இந்தியர்களுக்கான பொதுவான வழிகாட்டி நெறிமுறைகளாவது, இந்தியாவுக்கு வெளியே இந்தியர்களுடன் தொடர்புடைய விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே நம்முடைய முயற்சி.

ஆகவே, இலங்கையில் இருக்கும்போது, அனைத்து இந்தியர்களும் கவனத்துடன் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். இலங்கை பயணத்திற்கு முன்பு கரன்சி நோட்டுகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழ்நிலை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து காரணிகளை பற்றியும் அவர்கள் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இந்த நடைமுறைகளை நாங்கள் சில காலம் வரை செய்து வருகிறோம். ஏனெனில் இலங்கைக்கான மிக பெரிய சுற்றுலாவாசிகள் வளங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story