5 ஆயிரம் கி.மீ. தொலைவிலான எதிரி ஏவுகணையை தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை


5 ஆயிரம் கி.மீ. தொலைவிலான எதிரி ஏவுகணையை தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை
x

5 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து ஏவிய எதிரி ஏவுகணையை நடுவழியில் தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.


புதுடெல்லி,


இந்தியாவில் முதன்முறையாக தொலைதூரத்தில் இருந்து நாட்டை தாக்க வரக்கூடிய எதிரி ஏவுகணையை நடுவழியில் மறித்து, தாக்கி, அழிக்க கூடிய திறன் படைத்த ஏ.டி.-1 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.

ஒடிசா கடற்கரை பகுதியில் நடந்த இந்த பரிசோதனை முடிவில், ஏ.டி.-1 ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் செல்ல கூடிய ஏவுகணைகள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்க கூடிய போர் விமானம் ஆகிய இரண்டையும் துல்லியமுடன் தாக்கி அழிக்க முடியும்.

இதுபற்றி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் சமிர் காமத் கூறும்போது, இதற்கு முன் முதல் கட்டத்தின்படி, 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து நாட்டை தாக்க வரக்கூடிய எதிரி ஏவுகணையை அழிக்க கூடிய ஏவுகணைகளை உருவாக்கினோம்.

2-வது கட்டத்தின்படி, தற்போது 5 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து வரக்கூடிய எதிரி ஏவுகணையை நாம் தாக்கி, அழிக்க முடியும். இதனால் நமது எதிரி, தொலைதூர பகுதியில் இருந்து தாக்கும்போது, அதனை இடைமறித்து தாக்கும் திறனை நாம் பெற்றிருக்கிறோம்.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை எதிர்கொள்வதில் நாம் திறன் படைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம்.

இந்த ஏவுகணையானது நமது வளிமண்டல பகுதிக்கு உட்பட்ட வான் பகுதியில் செல்லும் திறன் படைத்தது. அதற்கு குறைவான உயரத்திலும் கூட அது பறந்து செல்ல கூடிய திறன் வாய்ந்தது.

2025-ம் ஆண்டில், இந்த ஏ.டி.-1 ஏவுகணையுடன் நமது திறனை நிரூபிக்க கூடிய வளிமண்டல பகுதிக்கு உயரே செல்ல கூடிய ஏவுகணைகளை உருவாக்க வேண்டும். 2025-ம் ஆண்டுக்குள் இது சாத்தியப்படும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story