பிறந்து 39 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 14வது மாடியில் இருந்து வீசி கொண்ட கொடூர தாய்
பிறந்து 39 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாயே 14வது மாடியில் இருந்து வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் மவுடண்ட் பகுதியை சேர்ந்த பெண் தனது கணவருடன் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு கடந்த 39 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அந்த பெண் நேற்று தனது குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து வீசி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தன் குழந்தையை பெற்ற தாயே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே வீசி கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story