காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x

கோப்புப்படம் 

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். இதனை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இந்திய ராணுவம், போலீசார் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இணைந்து கூட்டுப்படை ஒன்றை அமைத்து உள்ளன. இந்த கூட்டுப்படை ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா, உரி செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு கோடு வழியாக நேற்று காலை ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது.

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ள தகவலில், கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மூன்றாவது உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அருகிலுள்ள பாகிஸ்தான் முகாமில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதால் இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் அவர்கள் எந்த பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story