'இந்திய வரலாற்றை திருத்தி எழுதவில்லை' - மத்திய கல்வி மந்திரி தகவல்


இந்திய வரலாற்றை திருத்தி எழுதவில்லை - மத்திய கல்வி மந்திரி தகவல்
x

கோப்புப்படம்

இந்திய வரலாறு மாற்றியமைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

புதுடெல்லி,

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இந்திய வரலாறு மாற்றியமைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது:-

இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் எந்த திட்டத்தையும் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் மேற்கொள்ளவில்லை. ஆனால் விடுபட்ட முக்கியமான நிகழ்வுகள், நபர்களை சேர்த்து வரலாற்றை விரிவுபடுத்துகிறோம். சமீபத்தில் பிரதமர் மோடி மங்கார்தாமுக்கு சென்றார். அங்கு 1913-ம் ஆண்டு 1,500 பழங்குடி மக்களை ஆங்கிலேயர்கள் படுகொலை செய்தனர். இது குறித்து அறிய வேண்டாமா?

அல்லூரி சீதாராம ராஜுவின் தெலுங்கு புரட்சி, ஒடிசாவின் பக்சி ஜகபந்து பித்யாதர மொகாபத்ராவின் விடுதலை போராட்டம் குறித்து இந்தியா அறிந்து கொள்ள வேண்டாமா? நாகரிகங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் அவை எல்லாம் வரலாற்றில் இல்லை. தற்போதைய வரலாற்று புத்தகத்தில் இடம்பெறாத இவை எல்லாம் சேர்க்கப்படும். பல மொழிகள், கலாசாரங்கள், நம்பிக்கைகள் கொண்ட நாடு இந்தியா. அனைத்தையும் மதிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நம்பிக்கை.

இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.


Next Story