காவிரி விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும் - தேவகவுடா கோரிக்கை


காவிரி விவகாரம்:  பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும் -  தேவகவுடா கோரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2023 10:02 AM GMT (Updated: 25 Sep 2023 10:34 AM GMT)

காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு,

காவிரி விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடகாவின் நீர் இருப்பு நிலைமையை ஆராய மத்திய அரசு உடனே ஒரு குழுவை அனுப்பி வைக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும். நிபுணர்கள் குழு அமைத்து காவிரி அணைகளில் ஆய்வு நடத்த வேண்டும். வறட்சிகால பங்கீட்டு முறைப்படி தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட வேண்டும்.

கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தேவையான அளவு நீர் இருப்பு இல்லை. நான் உயிருடன் இருப்பது அரசியலுக்கோ அதிகாரத்துக்கோ அல்ல. கர்நாடகா மாநில மக்களைப் பாதுகாக்கத்தான். என்னுடைய கட்சியும் அதற்கு தான் இருக்கிறது. தற்போதைய சூழ்நிலை குறித்து நான் பிரதமரிடம் முறையிட்டுள்ளேன் என்றார்.


Next Story