ஜே.பி.நட்டா, எல்.முருகன் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
குஜராத்தில் ஜே.பி.நட்டா உள்பட 4 பா.ஜ.க. வேட்பாளர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
காந்திநகர்,
15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்தை நிரப்ப வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி நிறைவடைந்தது.
இதன்படி குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஜே.பி.நட்டா உள்பட 4 பா.ஜ.க. வேட்பாளர்களும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதேபோல் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட மத்திய தகவல் தொழில்நுட்ப இணை மந்திரி எல். முருகனும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story