கொலீஜியம் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்


கொலீஜியம் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு  சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
x

மத்திய அரசின் போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும். மத்திய அரசின் இப்போக்கு ஏற்புடையது அல்ல என்று கொலீஜியம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றங்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரைத்து வருகிறது. மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைக்கும். இதன் மீது மத்திய அரசு முடிவெடுத்து நியமனம், பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது வழக்கம்.

எனினும், சில நேரங்களில் கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை. சில நீதிபதிகள் நியமனத்தை ஏற்காமல் திருப்பி அனுப்பி வைக்கிறது. இதனால், அவ்வப்போது மத்திய அரசுக்கும் கொலீஜியத்திற்கும் இடையே கருத்து மோதல் நிலவுகிறது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் கொலீஜியம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலீஜியத்தின் பரிந்துரைகளில் சிலரை மட்டும் தேர்வு செய்து நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்து வருகிறது. இத்தகைய மத்திய அரசின் போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும். மத்திய அரசின் இப்போக்கு ஏற்புடையது அல்ல. மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கொலீஜியத்தின் பரிந்துரைகளை உடனே பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


Next Story