மத்திய பிரதேசத்தில் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை
மத்திய பிரதேசத்தில் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேசம் உமாரியா மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் பிரேம் சின்ஹா(வயது 63). ஓய்வுபெற்ற பிறகு, சின்ஹா மாநிலத்தில் உள்ள ஒரு தீர்ப்பாயத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒருமாதமாக அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனநல டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சின்ஹா படுக்கையில் காணாததால் அவரது மனைவி அவரை தேடி உள்ளார். அப்போது வீட்டின் முன் வளாகத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story