பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் - சபாநாயகருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்


பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் - சபாநாயகருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்
x

பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்குரியது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி நாடாளுமன்ற கண்ணியத்திற்கும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.Next Story