கர்நாடக மந்திரிசபையில் எந்தெந்த சமூகங்களுக்கு எத்தனை மந்திரி பதவிகள்?


கர்நாடக மந்திரிசபையில் எந்தெந்த சமூகங்களுக்கு எத்தனை மந்திரி பதவிகள்?
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:46 PM GMT)

கர்நாடக மந்திரிசபையில் எந்தெந்த சமூகங்களுக்கு எத்தனை மந்திரி பதவிகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நேற்று 24 மந்திரிகள் புதிதாக பதவி ஏற்றனர். இதன் மூலம் மந்திரிசபையில் முதல்-மந்திரி உள்பட 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் பல்வேறு சமூகங்களுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப மந்திரி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது லிங்காயத் சமூகத்திற்கு 8 மந்திரி பதவியும், ஒக்கலிகர் சமூகத்திற்கு 5 மந்திரி பதவியும், தலித்-பழங்குடியின சமூகங்களுக்கு 9 மந்திரி பதவியும், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு முதல்-மந்திரி உள்பட 7 மந்திரி பதவியும், முஸ்லிம் சமூகத்திற்கு 2 மந்திரி பதவியும், ஒரு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ சமூகத்திற்கு ஒரு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜெயின், பிராமண சமூகங்களுக்கு தலா ஒரு பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி பதவிகளை வழங்குவதில் சமூக நீதியை பின்பற்றியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்கள். சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்பதால், மூத்த தலைவர்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 9 மாவட்டங்களுக்கு மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.


Next Story