சட்டசபை தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி


சட்டசபை தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி
x

சட்டசபை தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. கர்நாடகத்தில் முதன் முறையாக ஆன்லைன் மூலமாக வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. குஜராத்தில் நடந்த தேர்தலின் போது முதல் முறையாக ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டு இருந்தது. தற்போது கர்நாடகத்திலும் அந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் 'வெப் போர்டு' மூலமாக டெபாசிட் தொகையை செலுத்திவிட்டு, 'சுவிதா' இணையதளம் மூலமாக ஆவணங்களை இணைக்க வேண்டும். அதன்பிறகு, வேட்புமனு தாக்கல் செய்ததற்கான நகல் காப்பியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்தால், அந்த நபர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது உறுதி செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால், தேர்தலிலும் ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட புதுமைகள் புகுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story