'மக்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறார்கள் என்பதை கர்நாடக தேர்தல் முடிவு காட்டுகிறது' - மம்தா பானர்ஜி


மக்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறார்கள் என்பதை கர்நாடக தேர்தல் முடிவு காட்டுகிறது - மம்தா பானர்ஜி
x

முரட்டுத்தனமான சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகளின் மூலம் முரட்டுத்தனமான சர்வாதிகார அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான முடிவை வழங்கிய கர்நாடக மக்களுக்கு எனது வணக்கங்கள். முரட்டுத்தனமான சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது.

பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் விரும்பும்போது, ஆதிக்கம் செலுத்தும் எந்த ஒரு மைய வடிவமைப்பும் அவர்களின் தன்னிச்சையை அடக்கிவிட முடியாது என்பது தான் இந்த முடிவுகளின் மூலம் கிடைத்துள்ள பாடம்" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story