காஷ்மீர்: அதிரடி நடவடிக்கையில் 31 பயங்கரவாதிகள் இந்த ஆண்டில் சுட்டு கொலை


காஷ்மீர்:  அதிரடி நடவடிக்கையில் 31 பயங்கரவாதிகள் இந்த ஆண்டில் சுட்டு கொலை
x
தினத்தந்தி 28 Sept 2023 9:34 AM IST (Updated: 28 Sept 2023 2:16 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்த ஆண்டில் கூட்டு நடவடிக்கையில் 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் ராணுவம், போலீஸ், எஸ்.எஸ்.பி., எல்லை பாதுகாப்பு போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் கூட்டாக இணைந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் போலீசார் வெளியிட்டு உள்ள செய்தியில், 2023-ம் ஆண்டில் காஷ்மீரில் இதுவரையில் நடத்தப்பட்ட கூட்டு அதிரடி நடவடிக்கையில் 31 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர் என தெரிவித்து உள்ளனர்.

இவற்றில் ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து 23 பயங்கரவாதிகளை சுட்டு கொலை செய்துள்ளனர். 2022-ம் ஆண்டில் மொத்தம் 187 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் 130 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள். 57 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஆவர்.

நடப்பு ஆண்டில் காஷ்மீரில் 111 பயங்கரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர். அவர்களில் 40 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள். 71 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஆவர். கடந்த ஆண்டு காஷ்மீரில் 137 பயங்கரவாதிகள் செயல்பாட்டில் இருந்தனர்.


Next Story