காஷ்மீர் பஸ் விபத்து; பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு


காஷ்மீர் பஸ் விபத்து; பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு
x

ஜம்மு மற்றும் காஷ்மீர் பஸ் விபத்து பற்றி அறிய விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ், தோடா என்ற பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ்சில் 55 பேர் பயணித்தனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 36 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. 19 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று மத்திய அரசு தெரிவித்தது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்த நபர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதியளித்து உள்ளார். இந்நிலையில், தோடா பஸ் விபத்தில், பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. விசாரணை கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story