ஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


ஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x

கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டது.

புதுடெல்லி,

அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, ஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இடைக்கால ஜாமீன் மறுப்பு அல்லது பதில் அளிக்காதது ஆகியவை கைது செய்ய அடிப்படையாக இருக்க முடியாது.

சிபிஐ அழைத்ததும் சென்றார். அமலாக்கத் துறை நோட்டீஸ்களுக்கு விரிவாகப் பதிலளித்தார். கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பதில் அளித்தார்.இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story